நாக்பூர் டெட்டனேட்டர் ஆலையில் பயங்கரம் வெடி விபத்தில் 18 பேர் பலி

நாக்பூர்: நாக்பூர் மாவட்டம் கல்மேஷ்வர் தாலுகாவுக்கு உட்பட்ட ராவல்காவ் கிராமத்தில் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் என்ற நிறுவன தொழிற்சாலை உள்ளது. இங்கு டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சுரங்கம் தோண்டுதல் போன்ற பணிகளுக்காக இவற்றை இந்த நிறுவனம் தயாரித்து சப்ளை செய்கிறது. நேற்று காலை சுமார் 6 மணியளவில், வெடிபொருள் தயாரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் வழக்கம்போல டெட்டனேட்டர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிறுவனத்தின் பேக்கிங் பிரிவில் இருந்த சில டெட்டனேட்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. சக்தி வாய்ந்த வெடிபொருள் என்பதால் தொழிற்சாலை கட்டிடம் சேதம் அடைந்தது. கூரை உட்பட பல பகுதிகள் இடிந்து விழுந்தன. மேலும் தீ பரவிய நிலையில் அடுத்தடுத்து டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடிபொருட்கள் வெடித்துச் சிதறின. இதில் 18 தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்தனர். 24 பேர் தீயில் கருகி படுகாயம் அடைந்தனர்.

Related Stories: