ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட ராமா தெரு சென்னை நடுநிலைப்பள்ளியில் ரூ.3.22 கோடியில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தினை திறந்து வைத்து, கரும்பலகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தொடுதிரையை இயக்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். கண்கவர் வண்ணங்கள் சுவர்களில் தீட்டப்பட்டுள்ளதையும், குழந்தைகளை கவரும் வகையில் மேஜை, டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி கருத்துகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-113, நூர்வீராசாமி தெருவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்டுள்ள பெண்கள் சுகாதார மையத்தினையும், வார்டு-112 பகுதியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4.50 கோடியில் கட்டப்பட்ட அண்ணா திருமண மாளிகையையும் திறந்து வைத்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அமைந்தகரை சென்னை நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4.15 கோடியில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடம், பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அண்ணா சாலையில் ரூ.3.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு சமூக நீதி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

Related Stories: