ஏன்பா ஆதவ் பிப்ரவரியே முடிஞ்சு போச்சே… ஏதோ கதை சொன்னீங்க! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ‘‘அதிமுக, திமுக, காங்கிரஸ் என எல்லாப் பக்கமும் இருந்தும் எங்கு மக்கள் சக்தி உள்ளதோ அங்கு வருவார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல, பிப்ரவரி மாதத்திற்குள் தற்போது திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் தவெகவில் இணைவார்கள். கண்டிப்பாக அது நடக்கும்’’ என வழக்கம் போல எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கூறினார்.

இந்நிலையில், நேற்று முன்தினத்துடன் பிப்ரவரி மாதம் நிறைவடைந்த நிலையில், தவெகவில் இணைய 3ம்,4ம் கட்ட நிர்வாகிகள் கூட அந்தப் பக்கம் தலைகாட்டவில்லை. இந்நிலையில், ஆதவ் ஆர்ஜுனா அளித்த அந்தப் பேட்டியைப் பகிர்ந்து, பிப்ரவரி மாதம் முடிந்து விட்டது, ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்றும்; சும்மா எதாவது அடித்து விடுவது எனச் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக, ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து இதுபோல எந்த அடிப்படையும் உண்மையும் இல்லாமல் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். தவெக நிர்வாகிகள் சிலர் ‘‘ஓ அவுங்க வராங்களா, ஓ இவுங்களும் வராங்களா’’ எனப் பேசிவந்தனர். ஆனால் கடைசிவரை யாரும் வரவில்லை. அதேபோல்தான், ஆதவ் அர்ஜூனாவின் பேச்சும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும், தற்காலிகப் பரபரப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Related Stories: