யார் நாய் பிடிக்குறா… ஜெ. சொன்னதை சொல்லட்டுமா? கே.பி.முனுசிடம் கர்ஜிக்கும் செங்ஸ்

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி நேற்று முன்தினம் செங்கோட்டையன் விஜய் கட்சியில் சேர்ந்தது குறித்து கூறும்போது செங்கோட்டையன் நாய் பிடிக்கும் வேலை செய்கிறார் என்று கூறினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக கோபியில் நடந்த தவெக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியதாவது: கேவலமாக ஒருவர் பேசினார். இவர் யார்? இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? நாயை பிடிக்க செங்கோட்டையன் இருக்கிறார் என்று சொன்னார். நாய் நன்றி உள்ள பிராணி. அதை மறந்து விடக்கூடாது.

இரட்டை இலையை முடக்குவதற்கு நன்றி கெட்டு கையெழுத்து போட்டவர் தான் இதை பேசினார். அது தான் வெட்கமாக இருக்கிறது. இருக்கின்ற இயக்கத்தில் இருந்து கொண்டு இரட்டை இலையை முடக்குவதற்கு முயற்சி எடுத்தவர் நம்மை பற்றி பேசுகிறார். அவருக்கு அந்த தகுதி இருக்கிறதா? என்பதை எண்ணி பார்க்க வேண்டும். நாயை அடித்து துரத்தினாலும் அந்த குடும்பத்துடன் தான் சுருண்டு படுத்து இருக்கும். முதலாளியை காட்டி கொடுக்காது.

இது தான் நாயின் நிலை. இந்த நாயை போல் நன்றியுடன் இருப்போம். இவர் சொன்னதை போல் துரோக செயலை எப்போதும் செய்ய முற்பட்டது இல்லை. நானும், தம்பிதுரையும் இருக்கும் போது அவரை பற்றி ஜெயலலிதா சொன்ன வார்த்தையை இப்போது சொல்ல விரும்பவில்லை. அவர் சொல் வேறானால் என்னாலும் சொல்ல முடியும். அம்பலப்படுத்துவேன். நாகரிகத்தோடு பேச வேண்டும் என நினைக்கிறேன்.

இவரை போல நாகரிகம் இல்லாமல் பேச விரும்பவில்லை. தவெகவிற்கு சென்றவர்கள் திரும்பி வருகிறார்கள் என்று கூறுகிறார்கள். வருவது மட்டும் இல்லை பதவி கொடுத்தால் பெற்றுகொள்ள தயாராக இருப்பதாக கூறி வருகின்றனர். என்னை பொறுத்த வரை இந்த கட்சியில் எனக்கு என்ன மரியாதை கிடைக்கிறது என்பதையும் நாடறியும். இவர்களுக்கு என்ன மரியாதை என்பதை எல்லோரும் அறிவார்கள் என்றார்.

Related Stories: