தவெகவில் வெடித்தது அதிகார மோதல்; நான் சொல்றவனுக்குதான் சீட்-புஸ்ஸி: அப்படிலாம் தர முடியாது-ஜான்: பஞ்சாயத்து பண்ண விஜய்ய மதிக்கல! அசிங்கப்பட்ட செங்ஸ்

தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சிகளும் முன்வராததால், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. வேட்பாளர்கள் தேர்வு பணியில் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் தலையீடு அதிகமாக உள்ளதாக விஜய்யிடம் தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

இதனால் சில தினங்களுக்கு முன் சென்னை பனையூர் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆராக்கியசாமி ஆகியோரை அழைத்து விஜய் பஞ்சாயத்து பேசி உள்ளாராம். அப்போது புஸ்ஸி ஆனந்த், ‘‘விஜய் நடிகராக இருந்தபோது ரசிகர் மன்றங்களில் தலைவராக இருந்தவர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும். நீண்ட காலமாக நம்முடன் இருந்து வருகின்றனர். இவர்கள் தான் நாம் சொல்வதை கேட்பார்கள்’’ என்று கூறியதுடன் வேட்பாளர்களின் பட்டியலை விஜய்யிடம் வழங்கினாராம்.

அப்போது, குறுக்கிட்ட ஜான் ஆரோக்கியசாமி, ‘‘நீண்ட காலமாக இருப்பதால் சீட் வழங்க முடியாது. தொகுதிகளில் வெற்றி முகம், யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவர்களுக்கு தான் சீட் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் படுதோல்வியை சந்திக்க நேரிடும்’’ என்று கூறினாராம். இதை கேட்டு கொண்டிருந்த விஜய், புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரை சமாதானப்படுத்த முயன்றார். இருந்தும் பயனில்லை. இதையடுத்து புஸ்ஸி அங்கிருந்து கிளம்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தவெக மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘தவெகவில் புஸ்ஸி ஆனந்த் தன்னை மீறி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். விஜய்க்கு தெரியாமலேயே கட்சியில் தனக்கு வேண்டியவர்களுக்கு பதவி கொடுத்துள்ளார். தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுத்தால் தான் தவெகவில் யாரும் அசைக்க முடியாத அளவுக்கு வந்து விடலாம் என்று கணக்கு போடுகிறார். இதை விஜய்யிடம் ஜான் ஆரோக்கியசாமி கூறி விட்டதாக தெரிகிறது.

புஸ்ஸி ஆனந்த்துக்கு செக் வைக்கும் விதமாக அந்தந்த தொகுதியில் பிரபலமாக உள்ளவர்கள், தனக்கு வேண்டியவர்களை வேட்பாளர்களாக நிறுத்த ஜான் ஆரோக்கியசாமி முடிவு செய்துள்ளார். அதன்மூலம் தனக்காக ஒரு கூட்டத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார். புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடையே நீடிக்கும் அதிகார மோதலால் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.

இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் விஜய் இறங்கினார். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதனால் தவெகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளர்கள் தேர்வு, முக்கிய முடிவுகள் எடுப்பதில் செங்கோட்டையனை யாரும் அழைப்பதே இல்லை. இதனால் செங்கோட்டையனும் அதிருப்தியில் உள்ளார்,’’ என்றார்.

Related Stories: