விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு; விஜய்க்கு ஆதரவாக டிவிட் செய்தால் ரூ.25: வாட்ஸ்அப் உரையாடல் வெளியானது: பிஆர் நிர்வாகிகளின் ஆடியோவும் வைரல்

சென்னை: விவாகரத்து கோரி நடிகர் விஜய்யின் மனைவி வழக்கு தொடுத்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக டிவிட் போட்டால் ரூ.25 வழங்கப்படும் என்ற வாட்சப் உரையாடல் வைரலானது. அதேபோல தவெக நிர்வாகிகள் பேசிக் கொண்ட ஆடியோவும் வெளியானது. அதில் ‘ஹலோ கவி, ஸ்ரீராம் பேசுகிறேன்.. தெரியுதுல எமர்ஜென்சி விவகாரம், செய்தி பார்த்தீங்களா.

கவி: ஆமாம் விவகாரத்து விவகாரம் தானே.

ஸ்ரீராம்: ஆமாம், கொஞ்சம் பிரச்சனை நம்முடைய கையை மீறி போவது போல் உள்ளது. டூல் கிட் ஒன்று இருக்கு அதில் என்ன இருக்கிறது என்றால் கரூர் விவகாரம் வைத்து முடக்கப்பார்த்தீங்க, ஜனநாயகத்தை முடக்கிவிட்டீங்க, பாஜவும், திமுகவும் கூட்டு சேர்ந்து அண்ணனை 2 நாட்கள் சிபிஐ அலுவலத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்தீர்கள்.

கூட்டணிக்காக, எஸ்.ஓ.பி போட்டு மக்களை பார்க்க விடாமல் அண்ணனை முடக்கினீர்கள், இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கிட்டு தான் இருக்கிறார்கள் என்று திமுகவிக்காக எதிராக கேஸ் டேக் சென்ட் பண்ணப்போகிறோம். கரூர் விவகாரத்தில் என்ன வேலை செய்தோமோ அதை தான் செய்யனும். ரொம்ப குடும்பத்தையெல்லாம் அட்டாக் பண்ண வேண்டாம், சங்கீதா மேடத்தையும் ரொம்ப அட்டாக் பண்ண வேண்டாம்.

இதற்கு பின்னாடி திமுக தான் இருக்கிறது என்றும்… மக்களிடம் இது எடுபடாது… அண்ணன் ஜெயிப்பதற்கு தான் வழிவகை பண்ணியிருக்கிறீர்கள் என்று பதிவிடுங்கள். இதை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள். ஒரு மணி நேரத்தில் அனுப்ப வேண்டும். அனைத்து டிவி சேனல்களிலும் செய்தி போட ஆரம்பித்து விட்டார்கள். இன்றைக்கு அவசரமாக இதை போட்டு விடுங்கள். உங்களுக்கு தேவையானதை பண்ணுகிறோம் என்று பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: