செங்கோட்டையன் பார்ப்பது நாய் பிடிக்கும் வேலைதான்: கே.பி.முனுசாமி பாய்ச்சல்

கிருஷ்ணகிரியில் நேற்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:  ஓபிஎஸ், செங்ேகாட்டையன் எல்லாம் மிகப்பெரும் சந்தர்ப்பவாதி என்று தீர்க்கதரிசியான எடப்பாடி பழனிசாமி மனதில் பட்டுள்ளது. அதனால் தான் இவர்களை எந்த நிலையிலும் மீண்டும் கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் சிலர் திட்டமிட்டு அதிமுக மூன்றாக, நாலாக உடைந்து விட்டது என்று கூறினர்.

சசிகலா, ஓபிஎஸ் பின்னால் யாரும் செல்லவில்லை. எனக்கு கிருஷ்ணகிரியில் செல்வாக்கு இருக்கிறது என்று நான் நினைத்தால் நினைப்பு பொழப்பை கெடுத்துவிடும். அப்படி நினைத்து கட்சியை விட்டு சென்றால் தனி ஆளாகவே நிற்கவேண்டும். இனி கட்சியில் எந்த சலசலப்பும் இல்லை. ஒட்டு மொத்தமாக அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும்.

செங்கோட்டையன் ஒரு சாதாரண ஆள். அதிமுகவில் சேர்ந்து பெரிய ஆளானார். தற்போது தவெகவில் சேர்ந்த அவரிடம் நாய்பிடிக்கும் வேலையை ஒப்படைத்துள்ளனர். அதிமுக தொண்டன் வைரம் பாய்ந்தவன். இதுபோன்ற சந்தர்ப்பவாத நாய்களிடம் அவன் சிக்கமாட்டான். எத்தனை முனை போட்டி வந்தாலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

Related Stories: