வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு ரகசியத்தை பின்பற்றுங்கள்; உங்களை காப்பாற்ற முடியாது

பல்லடம், ஏப். 13: சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. பல்லடம் வட்ட தேர்தல் துணை வட்டாட்சியர் அன்பரசு வரவேற்றார். தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் தலைமை வகித்து பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்களை நேரடியாக சந்தித்து அவர்களது வாக்குக்களை பதிவு செய்ய வேண்டும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். தினமும் 30 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும். இதில் ரகசியத்தை பின்பற்றுங்கள். ஓட்டு போடுவதை கட்டாயம் போட்டோ, வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதனையும் மீறி போட்டோ, வீடியோ ஏதாவது எடுத்து வெளியே வருமானால், உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. ஓட்டுப்பதிவு செய்து, படிவங்களை எவ்வாறு தனித்தனியாக போட்டு, கவர்களில் வாக்குப்பெட்டியில் போடுவது குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார். பல்லடம் வட்டாட்சியர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.

Related Stories: