கடைமடைக்கு வந்த பிஏபி தண்ணீர்

பல்லடம், ஏப்.13: பல்லடம், பொங்கலூர் பகுதியில் கடைமடைக்கு வந்த பிஏபி தண்ணீரால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிஏபி முதல் மண்டலம் பாசனம் நடக்கிறது. 2 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 3ம் சுற்று பாசனத்திற்கு கடந்த 9ம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்று பல்லடம், பொங்கலூர் பகுதியில் உள்ள கடைமடை பகுதியை அடைந்தது. கோடை மழையும் இல்லாமல் கடும் வறட்சியை எதிர்நோக்கி உள்ள பாசன பகுதிகளுக்கு பிஏபி தண்ணீர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: