உடுமலை, ஏப்.8:உடுமலை தொகுதி திமுக வேட்பாளர் ஜெயக்குமார் நேற்று வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டார். காலை 6.30 மணிக்கு ஏரிப்பாளையத்தில் பிரசாரத்தை துவங்கிய அவர், வேலன் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, யுஎஸ்எஸ் காலனி ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ரூ.8 ஆயிரம் கூப்பன், மகளிர் உரிமை தொகை 2 ஆயிரமாக உயர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். மாலை 4 மணிக்கு சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியின் 3, 4, 6, 7, 8, 9,10-வது வார்டுகளில் பிரசாரம் செய்தார். இரவு ரங்கசமுத்திரம், பக்கோதிபாளையம், பாலமநல்லூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். அவருடன் ஈஸ்வரசாமி எம்பி, நகர மன்ற தலைவர் மத்தீன், நகர செயலாளர் வேலுச்சாமி மற்றும் பலர் சென்றனர்.
உடுமலை திமுக வேட்பாளர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு
- உடுமலை திமுக
- உடுமலை
- திமுக
- ஜெயக்குமார்
- ஈரிப்பாலயம்
- வேலன் நகர்
- ஸ்டேட் பாங்க் காலனி
- யுஎஸ்எஸ் காலனி
- திமுக…
