காங்கயத்தில் தேர்தல் செலவின மேற்பார்வையாளர் கள ஆய்வு

காங்கயம், ஏப்.10: சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. வாக்குப்பதிவு எந்தவொரு விதிமீறல்களும் இன்றி நியாயமான முறையில் நடைபெற இந்திய தேர்தல் ஆணையம் பலவித நடைமுறைகளை மேற்கோண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காங்கயம் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு என சுமார் 15 குழுவினர் சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நிலை கண்காணிப்பு, பறக்கும் படையினரின் பணிகளை காங்கயம் சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் மொசுகண்டி கங்காதர் நேரில் சென்று ஆய்வு செய்தார். திருப்பூர் சாலை படியூர் அருகே வாகனங்களை நிறுத்தி சோதனையிடும் முறையை பார்வையிட்டு, அதனை வீடியோவாக பதிவு செய்ய வலியுறுத்தினார். காங்கயம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் செலவினம் குறித்த கோப்புகளை தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் அலுவலர் பாலமுருகன், உதவி தேர்தல் அலுவலர் தங்கவேல் உட்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

Related Stories: