நடிகர் கட்சிக்கு ஓட்டு தேறல புதுச்சேரியில போட்டி இல்ல

தமிழகத்தில் தவெக பொதுச்செயலாளராக புதுச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் செயல்படுகிறார். ஆனால் புதுச்சேரியில் கட்சியை காணவில்லை. ரங்கசாமியுடன், விஜய்யும், ஆனந்தும் நெருக்கமாக இருப்பதால் ஆளும் என்.ஆர் காங்கிரசின் கிளையாக மட்டுமே இருந்து வருகிறது. சமூக வலைதளங்களில் கூட ரங்கசாமியின் ஆதரவு பதிவை போடுபவர்களும், கமென்ட் போடுபவர்களும் விஜய் ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர், இணை கண்காணிப்பாளர் பதவிகளை நிரப்பினாலும், தேர்தலுக்கு தயாராகும் அளவுக்கே எந்த வேலையும் இல்லை. சர்வே எடுத்ததில் தொகுதிக்கு 500 ஓட்டு வரலாம் என தெரியவந்துள்ளது. அக்கட்சி தற்போதைய சூழல் வரை தேர்தலில் போட்டியிடும் நிலையில் இல்லை என முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.

என். ஆர். காங்கிரஸ், காங்கிரசில் தற்போதைய எம்எல்ஏக்களை சீட்டு இல்லையென கழற்றிவிடும் பட்சத்தில் தவெகவில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ சாமிநாதனிடம் தொடர்பில் இருந்து வருகின்றனர். ஆனால் புஸ்சியோ, விஜய்யோ புதுச்சேரி பக்கம் பார்வையை திருப்பவில்லை என அக்கட்சி நிர்வாகிகளே புலம்புகின்றனர்.

Related Stories: