சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள் பலி

சென்னிமலை, பிப்.20: சென்னிமலை அருகே பட்டிக்குள் புகுந்து தெரு நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பலியான சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னிமலை அருகே எல்லை கிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலக்காட்டு புதூரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 15க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர், நேற்று காலையில் பட்டிக்கு சென்று பார்த்த போது அங்கு தெரு நாய்கள் பட்டிக்குள் புகுந்து கடித்து குதறியதில் 4 ஆடுகள் இறந்து கிடந்தன. இது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மீண்டும் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Stories: