மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு

ஈரோடு, பிப்.20: சட்டமன்ற தேர்தலையொட்டி, ஈரோடு மாநகராட்சி அலுவலகம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அறையில் உள்ள பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சரிசெய்யவும், மழையில் பாதிக்காதவாறு கதவுகளை சீரமைக்கவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர், கண்காணிப்பு கேமராக்கள் இயக்கம் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: