*உயிர் தப்பிய பயணிகள்
சத்தியமங்கலம் : பவானிசாகர் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் செல்வதற்காக மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் சாலையில் பெரிய கள்ளிப்பட்டி அடுத்துள்ள விளாமுண்டி வனப்பகுதி வழியாக நேற்று காலை காரில் 3 பேர் சென்று கொண்டு இருந்தனர்.
வனப்பகுதி சாலையில் மல்லியம்பட்டி பிரிவு அருகே சென்றபோது கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வனப்பகுதியில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த பயணிகள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
