பொன்னமராவதி அண்ணாசாலையில் விரிவாக்க பணி சேங்கை ஊரணி-பேருந்து நிலையம் இடையே அகலப்படுத்தப்பட வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

பொன்னமராவதி : பொன்னமராவதி அண்ணாசாலையில் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியின் முக்கிய சாலையாக அண்ணாசாலை உள்ளது. இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது.

இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்யவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது அண்ணாசாலையில் பொன்.புதுப்பட்டி சேங்கை ஊரணியில் இருந்து புதுவளவு, வெள்ளையாண்டிபட்டி விளக்கு அருகில் வரை மட்டுமே இந்த சாலை ஒரு பகுதி அகலப்படுத்தப்பட்டு வருகின்றது.

முக்கியமாக சேங்கை ஊரணியில் இருந்து பேரூந்து நிலையம் வரை தான் அதிக நெருக்கடியாக உள்ளது. ஆனால் இந்த பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற வில்லை.
எனவே அண்ணாசாலை முழுவதும் அகலப்படுத்த தேவையான ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். அதன் பின்னர் தரமான சாலை மாற்றப்படவேண்டும்.

மேலும் அண்ணாசாலையினை ஒரு வழி பாதையாக அமைத்து போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சென்று வர ஏதுவாக இந்த சாலையினை அகலப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: