ஒழுங்கீனமற்ற முறையில் தலைமுடி அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே சிகை திருத்தம்

*ஆசிரியர்கள் நடவடிக்கை

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் விருத்தாசலம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் அதிகம் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்கள் சிலர் தலைமுடியை வெட்டாமல் ஒழுங்கீன முறையில் முடி வளர்த்துக் கொண்டு வருகின்றனர். இதனைப் பள்ளி தலைமையாசிரியர் வினோத்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜ சோழன், பிரகாசம், மனோகர் ஆகியோர் பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் கேட்காமல் பள்ளிக்கு வந்தனர்.

இதனால் அதிரடி நடவடிக்கையாக ஆசிரியர்கள் முடி திருத்தும் தொழிலாளர்களை பள்ளிக்கே வரவழைத்து தலை முடியை வெட்டி விட்டனர். மேலும் இனிமேல் பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் முடி வெட்டாமல் வந்தாலும், உரிய சீருடைகள் அணியாமல் வந்தாலும் பெற்றோர்களை வரவழைத்து கல்வித்துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

கடந்த சில தினங்களாக இப்பணியை மேற்கொண்டு வரும் பள்ளி நிர்வாகம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்துள்ளனர்.

Related Stories: