திருவாரூர்,பிப்.25: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 78 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா முடி கொண்டான் கிராமத்தில் வசித்து வருபவர் முத்தையன் (78). முதியவரான இவர் நேற்று முன்தினம் அதே ஊரைச் சேர்ந்த 3ம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் முத்தையனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.
