சென்னை : அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் 3வது கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
