முன்னாள் துணைவேந்தரை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்த விவகாரம் : ஆளுநருக்கு நோட்டீஸ்

சென்னை : முன்னாள் துணைவேந்தரை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்துசெய்த ஆளுநர் உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழ்நாடு ஆளுநர் பதில் அளிக்க ஆணை பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர், முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. துணைவேந்தராக இருந்த வேல்ராஜின் சஸ்பெண்ட் உத்தரவை ஆளுநர் 2025 செப்டம்பர் 5ம் தேதி திடீரென ரத்து செய்தார். இதற்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

Related Stories: