கருணை அடிப்படையில் கட்சி நடத்திக்கொண்டிருப்பவர் கருணைத் தொகை கொடுக்கப் போகின்றாராம்: திமுக மாணவர் அணி செயலாளர்

சென்னை: கருணை அடிப்படையில் கட்சி நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி மக்களுக்குக் கருணைத் தொகை கொடுக்கப் போகின்றாராம் என அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் அறிக்கைக்கு திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி பதிலளித்துள்ளார்.

இது தொடர்பான சமூக வலைதள பதிவில்:
பாஜகவின் கால்களைப் பிடித்து கருணை அடிப்படையில் கட்சி நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி மக்களுக்குக் கருணைத் தொகை கொடுக்கப் போகின்றாராம்..!

மிஸ்டர் எடப்பாடி பழனிசாமி உங்களிடம் கருணை வாங்க நீங்கள் ஒன்றும் மக்களுக்கான எஜமானன் இல்லை… பாஜகவின் தயவில் உயிர் வாழும் அடிமை நீங்க… உங்களுக்குப் பிடித்திருக்கும் இந்த ஆணவத் திமிருக்கு சுயமரியாதை உணர்வு கொண்ட தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தேர்தலிலும் மருந்து கொடுப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.

Related Stories: