மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று அளித்த பேட்டி: வரும் சட்டமன்ற தேர்தலிலோ, ராஜ்யசபா தேர்தலிலோ நான் போட்டியிட மாட்டேன். ஓபிஎஸ் அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவர் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம். அதைப்பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. இதுவரை பசுந்தோல் போர்த்திய புலியாக இருந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
உலக நாடுகளிலேயே வளர்ந்த நாடுகள் போட்டி போடும் அளவிற்கு இந்தியா முன்னேறி இருப்பதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியின் நல்லாட்சி தான். நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். என்.டி.ஏ கூட்டணியில், பாஜ தலைமையிலான கூட்டணியில் தான் இணைந்திருக்கிறேன். நாங்கள் பாஜ கூட்டணியில் இணைந்து, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். தொகுதி பங்கீடு குறித்து பாஜ உடன் பேசுவேன். அதற்கான நேரம் இருக்கிறது. இப்போது கூட்டணி பலமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
