தர்மபுரி: தர்மபுரியில் பாமக தலைவர் அன்புமணி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல், வரும் சட்டமன்ற தேர்தலிலும் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
அதிமுக கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெறும். வரும் தேர்தலில் அதிமுகவுக்கும்-திமுகவுக்கும் தான் போட்டி. யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அன்புமணி கூறினார்.
