திருப்பத்தூர் மாவட்டம் எங்களுக்கு தான்…அடம் பிடிக்கும் அதிமுக

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பான செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் அவரது தலைமையில் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை ஒன்று திரட்டி 1000 கிலோ மட்டன், 1000 கிலோ சிக்கன் பிரியாணி போட்டு விருந்து அளிக்கப்பட்டது, பின்னர் மாஜி அமைச்சர் வீரமணி பேசும்போது: தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வர உள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 13 தொகுதிகளையும் வென்றெடுக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு உள்ளது. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் அதிமுக தான் நேரடியாக போட்டியிட வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருகிறேன். வரும் சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பேசினார். இதை அறிந்த கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்காமல் சுயநலமாக 4 தொகுதிகளையும் அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என நினைக்கிறார். இப்படி சுயநலமாக இருந்தால் கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் இவருடன் சேர்ந்து எப்படி வேலை செய்வார்கள் என்று கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

 

Related Stories: