மின்னல்போல வந்து செல்பவர்களால் எந்த பலனும் இல்லை: இளம்பெண்களுக்கு விளக்கி கூற அமைச்சர் அறிவுரை

 

சேலம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மகளிர் பயிற்சி கூட்டம் நேற்று நேரு கலையரங்கில் நடந்தது. மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, சுய உதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் கடனுதவி என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சமீபத்தில் ஒன்றிய பாசிச பாஜ அரசின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில், 3 மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை மற்றும் கோடை சிறப்பு தொகுப்பு என ரூ.5,000 மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைத்து பெண்களை பெரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார்.

இத்தகைய சாதனை திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்திட மீண்டும் திராவிட மாடல் அரசு அமைய வேண்டும். இதுகுறித்து வீடுதோறும் சென்று அனைத்து மகளிரும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். மேலும் 18 முதல் 25 வயதுடைய பெண் பிள்ளைகளை சந்தித்து, அவர்களை சினிமா மோகத்தில் இருந்து விடுவிக்கச் செய்ய வேண்டும். மின்னல் போல சிலர் வந்து செல்வார்கள், ஆனால் அவர்களால் எந்தவொரு பலனும் கிடைக்காது, என எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

 

Related Stories: