சென்னை: சென்னை வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன், உயர்ரக கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் வைத்திருந்ததாக தினேஷ், மெக்கலன் ட்ரெவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 18 கிராம் மெத்தம்பெட்டமனை, 1.3 கிலோ கஞ்சா, 18 கிராம் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
