கரூர், பிப். 13: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அசோசியேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.
இதில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றியதை திரும்ப பெற வலியுறுத்துதல் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
