போலி பிம்பத்திற்கு மயங்காது இளைய தலைமுறையின் மனநிலை மாற்றும் கல்வி வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ம் நிதியாண்டிற்காக தாக்கல் செய்யப்பட்ட இடைகால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பேசியதாவது: இளைய தலைமுறை, போலி பிம்பத்திற்கு அடிபணியாமல், இணங்காமல், இந்த மண்ணையும், மொழியையும் இனத்தையும், இந்த நாட்டினுடைய பெருமையையும், வளத்தையும் காக்க வேண்டும். என் தமிழ்ச் சமூகத்தின் இளைஞர்கள், ‘நாங்கள் இவருக்குத்தான் ஓட்டு போடுவோம்’ என்று சொல்கின்ற அந்த மக்களின் மனநிலையை மாற்றுகின்ற கல்வி முறை, அரசியல் பயிற்சிகள், அரசியல் வகுப்புகள் ஒவ்வொரு குக்கிராமத்திலும் தொடங்கப்பட வேண்டும். இந்த மண்ணில் போலிகள் ஆட்சிக்கு வராதவண்ணம், அரசியலை மாணவச் செல்வங்களுக்கு ஆரம்பக் கல்வியிலிருந்து கற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: