சென்னை: தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சென்னை, எழும்பூரில் ரூ.10 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள கட்டிடம், ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி கூடம் ஆகியவற்றை இன்று திறந்து வைத்து பார்வையிட்டோம்.
மேலும், ரூ.10 கோடி செலவில் 100 ஆண்டுகள் பழமையான 10 இலட்சம் அரிய ஆவணங்களை Japanese Tissue முறையில் செப்பனிட்டுப் பாதுகாக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தோம். தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டங்கள் வெல்லட்டும்.
