சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது என்று எக்ஸ் தளத்தில் திருமாவளவன் பதிவிட்டுள்ளார். திமுக கூட்டணி உடையும் என்றவர்கள் கனவில் மண் விழுந்தது; கலைஞர் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது என பதிவிட்டுள்ளார்.
