மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை ஒட்டி, வரும் 21ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

 

விழுப்புரம்: விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை ஒட்டி, வரும் 21ம் தேதி சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம் மற்றும் நகரம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் எதிர்வரும் 21.02.2026 அன்று நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 21.02.2026 (சனிக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும் எனவும், மாணவ/மாணவியர்களுக்கு 21.02.2026 அன்று பள்ளி/கல்லூரி இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: