பொன்னை, பிப். 19 : பொன்னை அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி மாத பிரமோற்சவ தேர் திருவிழா அடுத்த மாதம் 3ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும் 21ம் தேதி முதல் 2ம் தேதி வரை பிரமோற்சவ தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் தேரை சீரமைக்கும் பணிகள் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வள்ளி தேவசேன சமேத சுப்பிரமணியசுவாமி ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். மேலும் இந்த பிரமோற்சவ விழாவில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளானோர் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளை நியமித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மேலும் வரும் 3ம் தேதி வள்ளி முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
பிரமோற்சவ தேர் சீரமைக்கும் பணி வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்
- பிரமோத்சவா
- வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
- பொன்னாய்
- சுப்பிரமண ஸ்வாமி கோயில்
- வல்லிமலை
- மாசி மாதம்
- பிரமோத்சவ தேர் திருவிழா
