டேராடூன்: தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் வரை செல்வதற்கு 6 மணி முதல் 7 மணி நேரம் வரை ஆகும். தற்போது இந்த பயண நேரத்தை பாதியாக குறைக்கும் வகையில், டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ” 213கி.மீ. நீளமும், 6வழிப்பாதைகளையும் கொண்ட இந்த டெல்லி -டேராடூன். வழித்தடம் ரூ.12ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடம் டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இது டெல்லி-டேராடூன் இடையேயான பயண நேரம் இரண்டரை மணி நேரமாக குறைக்கும். தடையற்ற அதிவேகப் போக்குவரத்து இணைப்பை உறுதிசெய்யும் வகையில் இந்த திட்டத்தின் செயலாக்கத்தில் 10 இணைப்புச் சாலைகள் மூன்று ரயில்வே மேம்பாலங்கள் நான்கு பெரிய பாலங்கள் மற்றும் 12 வழித்தட வசதி மையங்கள் ஆகியவற்றை கட்டமைக்கும் பணிகளும் அடங்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
