நொய்டா: உபி மாநிலம்,நொய்டா செக்டர் 39 எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கார் நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பூட்டிய காருக்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு பலத்த காயங்களுடன் இருப்பதை கண்டனர். கார் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. அந்த நபரின் கையில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டது, முதல்கட்ட விசாரணையின்படி, அந்த நபர் காருக்குள் இருந்த பெண்ணைச் சுட்டுக் கொன்று, பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இறந்தவர்கள் டெல்லியின் திரிலோக்புரியைச் சேர்ந்த சுமித் (32) மற்றும் நொய்டாவின் செக்டார் 101 இல் உள்ள சலார்பூரில் வசிக்கும் ரேகா (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நொய்டா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
