மும்பை: தெற்கு- மத்திய மும்பை பகுதியில் உள்ள வடாலாவிலிருந்து தானேவை இணைக்கும் வகையில் மெட்ரோ வழித்தடம்-4 அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடமானது காட்கோபர், விக்ரோலி, பாண்டூப், முலுண்ட் போன்ற பகுதிகளை இணைக்கும் எல்பிஎஸ் சாலையைக் கடந்து செல்கிறது. முலுண்ட் தீயணைப்பு துறை அலுவலகம் அருகே இருக்கும் இந்த மெட்ரோ பாலத்தின் 196வது துணுக்கு அருகே இருந்த ஸ்லாப் ஒன்று நேற்று மதியம் 12.15 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் எல்பிஎஸ் சாலையில் சென்ற கார் மற்றும் ஆட்டோ உட்பட 4 வாகனங்கள் கடும் சேதமடைந்தன. இந்த விபத்தில் ராம்தான் யாதவ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இடிபாடுகளை அகற்றி வாகனத்துடன் சிக்கியிருந்த 3 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த ராம்தானின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மும்பை மெட்ரோ ஸ்லாப் இடிந்து விழுந்து ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்; வாகனங்கள் சேதம்
- மும்பை மெட்ரோ
- மும்பை
- மெட்ரோ பாதை-4
- தானே
- வடலா
- எல்.பி.எஸ் சாலை
- கத்கோபர்
- விக்ரோலி
- பண்டிட்பூர்
- முலுண்ட்
- முலுண்ட் தீயணைப்புத் துறை…
