மருத்துவமனையில் இருந்து சரத்பவார் டிஸ்சார்ஜ்

புனே: உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட என்சிபி(எஸ்பி) தலைவர் சரத்பவார் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவாருக்கு, கடந்த 9ம் தேதியன்று மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் தொடர் இருமல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் புனேயில் உள்ள ரூபிஹால் கிளினிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை செய்ததில், சரத்பவாருக்கு மார்பில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்ட நிலையில் உடல்நலம் தேறினார். சமீபத்தில் மறைந்த துணை முதல்வர் அஜித்பவாரின் மனைவியும் துணை முதல்வருமான சுனேத்ரா பவார், தனது மகன் பார்த் பவாருடன் மருத்துவமனைக்கு சென்று சரத்பவாரிடம் நலம் விசாரித்திருந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் சரத்பவார், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் இன்னும் 3 அல்லது 4 நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: