திருப்பூர், பிப்.14: மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்காக மருத்துவர் பரிசோதனை அவசியம். அதற்காக நேற்று நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ சான்றிதழ்களை பெற்றனர்.
இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உதவிகளை மருத்துவர்கள் கூறினர். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவி தொகை, கல்வி உதவித்தொகை, உபகரணங்கள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
