மேற்கு வங்க நிலக்கரி ஊழல் ரூ.100 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் சட்டவிரோத சுரங்கம் அமைத்து நிலக்கரி திருட்டு நடந்துள்ளது. இந்த நிலக்கரி தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யப்பட்டது தொடர்பான பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கிறது. இதுதொடர்பாக சமீபத்தில் முதல்வர் மம்தா கட்சியின் தேர்தல் வியூக நிபுணர் ஐபேக் அமைப்பின் இயக்குநர் பிரதிக் ஜெயின் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நிலக்கரி ஊழல் தொடர்பாக ரூ.100 கோடி மதிப்புள்ள புதிய சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.322 கோடியாகும்.

Related Stories: