போலி சம்பள பில் தயாரித்து ரூ.2 கோடி மோசடி: ஒடிசா அரசு இளநிலை உதவியாளர் கைது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், அங்குல் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்பவர் சுப்ரத் குமார் குமார் பெஹரா(39). இவர் தனது மாத சம்பளத்திற்கு போலி பில் தயாரித்து அதிக தொகையை பெற்று மோசடி செய்துள்ளார். கடந்த 2017 முதல் 2025 வரை அவர் ரூ. 2.38 கோடி அரசாங்க பணத்தை முறைகேடாக பெற்றுள்ளா்.

இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்துள்ளதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அங்குல் நகரில் மொத்தம் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சோதனையின் போது அவருக்கு சொந்தமாக 3 மாடி வீடு இருப்பது தெரிய வந்தது.

இந்த சோதனையில் 56 சவரன் நகை, வங்கியில் ரூ.36 லட்சம் டெபாசிட் செய்ததற்கான ஆவணங்கள் ,2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.17 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுப்ரத் குமார் கைது செய்யப்பட்டார். அவர் வசம் இருந்த நகைகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: