செலவு கணக்கு பராமரிப்பு ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல், ஏப்.10: நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின கணக்குகள் பராமரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவின கணக்குகள் பராமரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், வரும் 13, 17 மற்றும் 21 ஆகிய 3 நாட்கள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற உள்ளது. தேர்தல் செலவின பார்வையாளர் முகேஷ் கட்டரியா தலைமை வகித்து பேசுகிறார். கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தேர்தல் செலவினங்களை முறையாக பராமரிப்பது தொடர்பான ஆலோசனைகள் தெரிவிக்கப்படும். எனவே, கூட்டத்தில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களோ அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளோ தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: