மல்லசமுத்திரத்தில் ரூ.2.10 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், ஏப்.9: திருச்செங்கோடு வேளாண்மை, உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் வாரம் தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் மங்களம், கரட்டுவளவு, பள்ளக்குழி அக்ரஹாரம், செண்பகமாதேவி, அரசமரம், ராமாபுரம், பருத்திப்பள்ளி, திம்மிபாளையம், கொளங்கொண்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் 60 கிலோ எடை கொண்ட 92 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், பி.டி.,ரகம் பருத்தி குவின்டால் ரூ.8311 முதல் ரூ.8842 வரையும், கொட்டு பருத்தி ரூ.3850 முதல் ரூ.5119 வரை என மொத்தம் ரூ.2.10 லட்சத்திற்கு ஏலம் போனது. இதில் சேலம், ஈரோடு, நாமக்கல், அவிநாசி, கோவை பகுதி சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த ஏலம் வருகிற 15ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: