திருச்செங்கோடு, ஏப்.10: திருச்செங்கோடு நகராட்சி கமிஷனர் வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 13.4.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84(1) படி சொத்து உரிமையாளர்கள், தங்களது 2026- 27ம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை, ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர் ஆவர். எனவே, திருச்செங்கோடு நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள், ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம், அதிகபட்சமாக ரூபாய் 5000 மற்றும் 5000 ஊக்கத்தொகை பெற்று பயனடையும் படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
