தமிழ்நாட்டை நம்பர் 1 மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வு எனக்கு கூடியுள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை : டி.என்.பி.எஸ்.சி, டி.ஆர்.பி மூலம் அரசு பணிகளுக்கு தேர்வான 9,801 பேருக்கு இன்று ஒரே நாளில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்று தமிழ்நாட்டுக்கு சூப்பர் மார்னிங்; பல தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து 1.31 கோடி மகளிருக்கு ரூ.5000 உரிமைத் தொகை வரவு வைத்துள்ளோம்; மனம் நிறைவாக இருக்கிறது. தமிழ்நாட்டை நம்பர் 1 மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வு எனக்கு கூடியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.கடந்த 5 ஆண்டுகளில் 38 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்துள்ளோம்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: