பு.புளியம்பட்டி நகர் மன்ற கூட்டம் 43 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சத்தியமங்கலம், பிப்.5: புஞ்சைபுளியம்பட்டியில் நகர மன்ற கூட்டத்திற்கு தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சிதம்பரம், நகராட்சி பொறியாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் வார்டுகளில் சாலை வசதி, தெருவிளக்கு, வடிகால், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்தனர்.

கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு நகர் மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் நகராட்சி பொறியாளர் ஆகியோர் பதிலளித்து பேசினர். கூட்டத்தில் 2026-2027ம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத் திட்டம், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்தும், நகராட்சியின் செலவினங்கள், குடிநீர் திட்ட பராமரிப்பு செலவினம் உள்ளிட்ட 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Related Stories: