அம்பேத்கர் போர்டு வைக்கக்கோரி விசிக மறியல்

விக்கிரவாண்டி, பிப். 4: விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் மெயின்ரோடு பேருந்து நிலையத்தில் இருந்த அம்பேத்கர் உருவ படம் உயர்நீதி மன்ற உத்தரவின்பேரில் போலீசார் அகற்றினர். இதன் பிறகு போர்டு வைக்க கோரி விசிகவினரும், கிராம மக்களும் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இருதரப்பினரிடையே தனித்தனியாக சமாதான பேச்சுவார்த்தை கடந்த 30ம் தேதி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. அதில் மாவட்ட நிர்வாக முடிவின்படி நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று விசிகட்சியினர் மற்றும் பெண்கள் ராதாபுரம் பஸ் நிறுத்தத்தில் அம்பேத்கர் உருவ போர்டை வைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தாசில்தார் தமிழ்செல்வி, டிஎஸ்பி நல்லசிவம், இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மருது ஆகியோர் இரு தரப்பினரிடையே பேசி சமாதானம் செய்து, முடிவில் பஸ் நிறுத்தம் எதிர்புறம் அம்பேத்கர் உருவ போர்டை வைத்தனர்.

இந்நிலையில் போர்டு வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர்கள் மற்றும் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அதிகாரிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். இதையடுத்து அதிகாரிகள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் அப்பகுதியில் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதுதொடர்பாக விசிகவினர் 200 பேர் மீதும், வணிகர்கள் 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: