கோத்தகிரி : கோத்தகிரியில் உடல்நலக்குறைவால் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு காவல்துறையினரின் காக்கும் காவலர்கள் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவரது குடும்பத்திற்கு 1997ம் ஆண்டு காவல்துறையினர் பிரிவு-2ல் சேர்ந்த காவல்துறையினர் மொத்தம் 2,624 பேர் சேர்ந்து காக்கும் காவலர்கள் சார்பாக நிதி சேகரித்தனர்.
இதில் மொத்தம் ரூ.13 லட்சத்து 14 ஆயிரம் கிடைத்தது. அந்த தொகையை பாலசுப்பிரமணியத்தின் குடும்பத்தினருக்கு குன்னூர் டிஎஸ்பி ரவி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்தி ஆகியோர் வழங்கினர்.
