சென்னை: சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து அளித்தார். தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது ராகுல்காந்தி கேரள சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தமிழ்நாட்டுக்கு விரைவில் வருவார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்தும், தனியாகவும் பிரசாரம் மேற்கொள்வார். அதேபோன்று பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவும் தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அவர்களும் மிக விரைவில் வருவார்கள்.
கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட விஜய்யை பார்க்க மிகப்பெரிய கூட்டம் கூடியதை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்டதற்கு, நடிகரை பார்க்க யார் வேண்டுமென்றாலும் வருவார்கள், அஜித் வந்தால் இதைவிட 2 மடங்கு கூட்டம் வரும், ரஜினிகாந்த் வந்தால் 3 மடங்கு கூட்டம் வரும், கூட்டம் வந்து வாக்குகளாக மாறாது. இதற்கு சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் உதாரணம் என்றார்.
