பொதுமக்கள் திடீர் மறியல்

விருத்தாசலம், பிப். 10: விருத்தாசலம் அருகே உள்ள வி. குமாரமங்கலத்தில் சுமார் 12 ஏக்கர் அளவிற்கு அரசு பொது இடம் அமைந்துள்ளது. அந்த இடத்தில் வேறு வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தற்போது இலவச மனை பட்டா வழங்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று இரவு விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம், அருகே உள்ள குமாரமங்கலத்தில் அரசு இடம் உள்ளது. அங்கு எங்களுக்கு வீட்டுமனை பட்டா தரவேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய தாசில்தார் அரவிந்தன், இனிமேல் அவ்விடத்தில் பட்டா கொடுக்க இடமில்லை எனக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் திடீரென தாலுகா அலுவலகம் முன் விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: