ஐடி ஊழியர் விஷம் குடித்து சாவு

சிதம்பரம், பிப். 10: சிதம்பரம் அருகே உள்ள மேல திருக்கழிப்பாலை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி மகன் செல்வமணிகண்டன்(25). இவர் பிஇ முடித்து விட்டு சென்னையில் ஐடி துறையில் பணிபுரிந்து வந்தார். சென்னையில் இருந்து விடுமுறைக்கு சமீபத்தில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னை உள்ளதாக பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செல்வமணிகண்டன் கடந்த 4ம் தேதி வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். அவரை உறவினர்கள் மீட்டு, அண்ணாமலை நகரில் உள்ள அரசு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: