திருப்பூர், பிப். 10: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித்திடம், 57வது வார்டு கவுன்சிலரும், சுகாதாரக் குழு தலைவருமான கவிதா நேதாஜி கண்ணன் மற்றும் வட்ட செயலாளர் தங்கதுரை ஆகியோர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டலம் 57வது வார்டு திருக்குமரன் நகர் மேற்கண்ட வீதிகளில் சுமார் 500 வீடுகளுக்கு மேல் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மழைநீர் வடிகால் வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மழைநீர் வடிகால் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இந்த பிரச்னைக்கு ஏற்கனவே இருந்த கமிஷனர் ஆய்வு செய்து எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. எனவே திருக்குமரன்நகர் 1, 2, 3, 4, 5, 6 மற்றும் வள்ளலார் நகர் மெயின் வீதி மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
